;
Athirady Tamil News

கொக்கிளாயிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு !!

0

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய் மேற்கு கிராமசேவர் பிரிவில், புளியமுனை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மாலை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.

குறிப்பாக நேற்று மின் வெட்டு அமுலில் இருந்த நிலையில், வீட்டு வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காக எரிவாயு அடுப்பை இயக்கியபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக, வெடிப்புச்சம்பவம் இடம்பெற்ற வீட்டார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் வெடிப்புச் சம்பவத்தின் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.