;
Athirady Tamil News

வெளியேற அவசரமில்லை !!

0

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமாயின், அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது எனவும், தொலைநோக்குப் பார்வை தேவை எனவும் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (06) கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.அங்கு மேலும் தெரிவித்த அவர், கூட்டணியை விட்டு வெளியேறுமாறு கட்சியைச் சேர்ந்த பலர் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் கூட்டணியில் இருந்து விலகும் எண்ணம் இதுவரை இல்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலுப்பெற்று, கீழ் நிலைகளையும் கட்டமைப்புகளையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கூட்டமைப்பிலிருந்து விலகி சுதந்திரமாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கட்சியின் அடித்தளம் வலுவாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்த அரசாங்கம் 2020 இல் அமைக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் இருக்க மொத்தம் 5 ஆண்டுகள் உள்ளன.

இந்த காலகட்டத்தில், பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே எதிர்காலத்தை இன்னும் கணிக்க முடியாது என்றார்.மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றுவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்தால், அது இலகுவானதாக இருக்காது என்றும் ஜயசேகர தெரிவித்தார்.

கூட்டணியில் உள்ள 14 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மட்டும் வெளியேற்றப்பட மாட்டார்கள், மேலும் 12 கட்சிகள் கூட்டமைப்புக்குள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இல்லாத ஆனால் தீவிர ஆதரவாளர்களும் எங்களிடம் உள்ளனர். பக்கச்சார்பான நடவடிக்கையால் அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. எனவே நேரம் வரும்போது, ​​அது எவ்வாறு செல்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.