;
Athirady Tamil News

நல்லூர் பிரதேச சபையின் பாதீட்டுக்கு கூட்டமைப்பு எதிர்ப்பு! (படங்கள், வீடியோ)

0

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தல ஒரு உறுப்பினர் என 12 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதே வேளை,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் என 8 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தர்.

இதனால் தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் 6 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சை குழு சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தல ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.