;
Athirady Tamil News

ஹட்டனில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!!

0

ஹட்டன், வெலி ஓயா தோட்ட மேற்பிரிவில் எரிவாயு சமையல் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (12) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் உள்ள பெண் சமைத்துக் கொண்டிருக்கும் போது, எரிவாயு அடுப்பில் உள்ள ரெகுலேட்டர் வெடித்துள்ளது.

இச்சம்பவத்தின் போது உயிர் சேதம் ஏதும் ஏற்படாவிட்டாலும் எரிவாயு அடுப்பு சேதமாகியுள்ளதுடன் பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த எரிவாயு சிலிண்டர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.