;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான அறிவித்தல்.!!

0

தற்பொழுது நாட்டில் நிலவும் கொரோனா கடும் தொற்று காரணமாக வைத்தியசாலை சமூகத்தினரினதும் நோயாளர்களினதும் நலன் கருதி நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் தெரிவித்தார்.

தங்களது உறவினர்களோ அல்லது நண்பர்களோ தங்கியுள்ள விடுதியிலிருந்து வழங்கப்படுகின்ற நோயாளர் பார்வையிடும் அட்டையினைக் (Patient visitors Card) கொண்டு ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே உள் நுழைய முடியும் என்பதுடன் நோயாளர்களை காலை 6.00 மணி – 7.00 மணி வரையும் மதியம்:-12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரையும் மாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையும் நேரங்களில் மாத்திரம் நோயாளர் பார்வையிட அனுமதிக்க முடியும் அத்துடன் ஏனைய நேரங்களில் நோயாளர்களை பார்வையிட வருவதையோ , நோயாளர் பார்வையிடும் அட்டை இன்றி வருகை தருவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நாட்டு மக்களையும் வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்களையும் பாதுகாத்து அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்கவேண்டிய பொறுப்புடன் வைத்தியசாலை சமூகம் செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இது. தயவுசெய்து உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் தொடர்ந்தும் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.