;
Athirady Tamil News

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியுடன் டிப்பர் மோதுண்டு விபத்து ஒருவர் காயம்!!

0

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (12.12.2021) காலை 9.30 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் சென்றவரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்

புளியங்குளம் இராமனூர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தினை அண்மித்த சமயத்தில் வீதியோரமாக துவிச்சக்கரவண்டியில் சென்றவரை துவிச்சக்கரவண்டியின் பின்பகுதியில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது

இவ்விபத்தில் டிப்பர் வாகனத்தின் கீழ் பகுதியினுள் துவிச்சக்கரவண்டி சிக்குண்டதுடன் துவிச்சக்கரவண்டியின் சாரதி காயங்களுடன் உயிர்தப்பினார்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.