;
Athirady Tamil News

ஒமைக்ரான் வைரஸ்: இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்படுமா?- உலக சுகாதார அமைப்பு கருத்து…!!!

0

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலுக்கு பரவியது. பின்னர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது. இதுவரை 59 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்தப்படியே இருக்கிறது. இதற்கு ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணம் என்று கூறப்படுகிறது. இது போல் சிலநாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ்

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரசால் 33 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய இயக்குனர் பூனம் கேந்திரபால் கூறியதாவது:-

ஒமைக்ரான் மாறுபாடு மோசமாக இருக்கும் மென்று கருதமுடியாது ஆனாலும் அது நிச்சயமற்றது.

கொரோனா நோய் தொற்று இன்னும் உலகை சுற்றி வருகிறது. உலகின் மற்ற பகுதிகளில் காணப்படும் நோய் பாதிப்பின் எழுச்சி மற்றும் மாறுபாடுகள் தோன்றுவதால் கொரோனா ஆபத்து அதிகமாக உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் நாம் பாதுகாப்பை விற்றுவிட கூடாது. நாம் கண்காணிப்பு பொது சுகாதாரம், சமூக நடவடிக்கைகளை தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்துவதை விரைவுப் படுத்தவேண்டும்.

ஒமைக்ரான் வைரசில் சில அம்சங்கள், அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள் ஆகியவை கொரோனா தொற்று நோயின் போக்கில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.

அந்த தாக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்வது சற்று கடினம். அதை தெளிவுப்படுத்த உலக சுகாதார அமைப்பு மேலும் தரவுகளை சமர்ப்பிக்கு மாறு உலகநாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

தரவுகளை ஆய்வு செய்ய ஆயிரக்கணக்கான நிபுணர்கள் கூட்டப்பட்டுள்ளனர். ஒமைக்ரானின் பரவும் தன்மை, தீவிரம், மறுதொற்று போன்ற வைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து வரும் தரவுகள் ஒமைக்ரானில் இருந்து மீண்டும் நோய் தொற்று ஏற்படும் ஆபத்தை காட்டுகிறது. ஆனாலும் அதை உறுதிப்படுத்த இன்னும் பல முடிவுகள் எடுக்க வேண்டும்.

டெல்டா வகை மாறுபாட்டைவிட ஒமைக்ரான் லேசான நோயை உண்டாக்குகிறது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. ஆனால் அதை இப்போது உறுதிப்படுத்துவது கடினம்.

விரிவான, சரியான நேர பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதால் கட்டுபாடுகள் பயன் உள்ளதாக இருக்கும். தடுப்பூசியை விரைவாக செலுத்தும் முயற்சிகளை தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.