;
Athirady Tamil News

மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.!! (படங்கள், வீடியோ)

0

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று காலை முதல் ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

கொவிட்-19 தடுப்பூசிவழங்கல் திட்டத்தின் கீழ் 30வயதிற்குமேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்குமேற்பட்டபொருளாதாரவளர்ச்சியில்முக்கியபங்குவகிக்கும்தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ளமக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள்மற்றும்பணியிடங்களில் பணிபுரிவோர்,சுகாதாரதுறைசாராதமுன்னிலைஊழியர்கள்)மேலதிகமாக மூன்றாவதுதடவையாக( கோவிட்-19 தடுப்பூசியானது திங்கட்கிழமைமுதல்; வடமாகாணத்தின் ஐந்துமாவட்டங்களிலும்வழங்கப்படுகிறது

மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாவதுதடுப்பூசியைப் பெற்றுஆகக்குறைந்ததுமூன்றுமாத இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினைபெற்றுக்கொள்ளலாம்.

இரண்டுதடவைகள் கோவிட்-19 தடுப்பூசியைபெற்றுக்கொண்டவர்களில் கோவிட்-19தொற்றிற்குஉள்ளானவர்கள் அவ்வாறுதொற்றுஉறுதிசெய்யப்பட்டநாளிலிருந்து 06 மாதகால இடைவெளியின்பின்னர்இத் தடுப்பூசியினைபெற்றுக்கொள்ளலாம்.

எனவேமேற்குறிப்பிட்டவர்களில் சினோபாம்அல்லதுஏதாவதுஒருகோவிட்-19 தடுப்பூசியை இரண்டுதடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமேதமதுதடுப்பூசிஅட்டையினைசமர்ப்பித்துதமக்குரிய மூன்றாவதுதடுப்பூசியினைபெற்றுக்கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு

இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாகஅந்தந்தபிரதேசங்களிற்குரியசுகாதாரவைத்தியஅதிகாரிபணிமனை மூலம் மக்களிற்குஅறிவிக்கப்பட்டுள்ளது

அவ்வகையில் மேற்குறிப்பிட்டவர்கள்அந்தந்தபிரதேசங்களிற்குரியசுகாதாரவைத்தியஅதிகாரிபணிமனைகளில் அல்லதுஅவர்களால் அறிவிக்கப்படும் நிலையங்களில் இன்றும் மற்றும் தடுப்பூசிஅல்லதுவேறுமருந்துகளிற்குஒவ்வாமைஉடையவர்களுக்குமார்கழிமாதம் 18 ஆம்திகதிமுதல் பிரதிசனிக்கிழமைகளில்தடுப்பூசிவழங்குவதற்குயாழ் மாவட்டத்தில் யாழ் போதனாவைத்தியசாலைமற்றும் பருத்தித்துறை,ஊர்காவற்துறை,தெல்லிப்பழை,சாவகச்சேரிஆதாரவைத்தியசாலைகளிலும்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா,மன்னார் ஆகியமாவட்டங்களில் உள்ளமாவட்டபொதுவைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள்; வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

30 வயதிற்குமேற்பட்டவர்களில் அவ்வாறானநிலைமைகள் இருப்பதாகசந்தேகிக்கப்பட்டு தடுப்பூசிவழங்கப்படாதுதிருப்பிஅனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசிவழங்கும் நிலையத்தில் உள்ளவைத்தியஅதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுமேற்குறிப்பிட்டவைத்தியசாலைகள் ஏதாவதுஒன்றில் தமக்குரியமூன்றாவதுதடுப்பூசியினை பாதுகாப்பாகபெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.