;
Athirady Tamil News

வவுனியா நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு – சம்பவ இடத்தில் பெண் பலி!! (படங்கள்)

0

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (15) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – நெடுங்கேணி – சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் பாலசுந்தரம் சத்தியகலா 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டே மரணமடைந்துள்ளதாகவும், யாரால் , எதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது, போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்ததனால் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.