;
Athirady Tamil News

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரானின் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்காளத்திலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. அபுதாபியில் இருந்து சமீபத்தில் ஐதராபாத் வழியாக கொல்கத்தா வந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த சிறுவன் முர்ஷிதாபாத் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவனின் பெற்றோருக்கு பாதிப்பு இல்லை. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன….!!

0

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரானின் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்திலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. அபுதாபியில் இருந்து சமீபத்தில் ஐதராபாத் வழியாக கொல்கத்தா வந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த சிறுவன் முர்ஷிதாபாத் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவனின் பெற்றோருக்கு பாதிப்பு இல்லை. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.