;
Athirady Tamil News

மகளின் பெயரை வெளியிட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…!!

0

பிரிட்டன் பிரதமர் 57 வயதான போரிஸ் ஜான்சன், மூன்றாவதாக 33 வயதான கேரி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் போரிஸ் ஜான்சன்- கேரி தம்பதிக்கு கடந்த 9-ஆம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் போரிஸ் ஜான்சனும், அவரது மனைவி கேரியும் தங்களது மகளுக்கு “ரோமி ஐரிஸ் சார்லோட் ஜான்சன்” என்று பெயர் சூட்டியுள்ளனர். போரிஸ் ஜான்சன், தனது தாயார் பெயரான சார்லோட் என்ற பெயரையும் சேர்த்து தன் மகளுக்கு சூட்டியுள்ளார்.

போரிஸ் ஜான்சன் குழந்தை

போரிஸ் ஜான்சனின் முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.