;
Athirady Tamil News

வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு !!

0

நாட்டின் பல பகுதிகளில் நாளையதினம் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என, திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.