;
Athirady Tamil News

எல்லை தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் படகுடன் கைது! (படங்கள், வீடியோ)

0

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 43 மீனவர்களை கைது செய்துள்ள அதே வேளை 6 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்கள் பயனித்த படகுகளும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டது.

தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.