;
Athirady Tamil News

கந்தர்மட சந்தியில் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் கந்தர்மட சந்திக்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் இருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் , யாழ்.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.