;
Athirady Tamil News

வவுனியா IDM Nations Campus இன் வருடாந்த சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு..! (படங்கள்)

0

வவுனியா IDM Nations Campus இன் வருடாந்த சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வட பிராந்தியத்தில் மாணவர்களுக்கான கல்விச் சேவையினை திறம்பட வழங்கி வருகின்ற IDM Nations Campus இனுடைய வட பிராந்திய இயக்குனர் திரு. அன்ரு அனஸ்லி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக IDM Nations Campus இன் நிர்வாக இயக்குனர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினராக வவுனியா Headquarters Chief Inspector of Police திரு. மானவடு, சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட இயக்குனர் De La Salle House அருட்சகோதரர் J. Stanislaus அவர்களும் மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

IDM Nations Campus 40 ஆண்டுகளுக்கு மேலாக கல்வித்துறையில் சிறந்து விளங்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஆகும்.

வட மாகாணத்தில் வவுனியா மண்ணிலும் பல வேறு துறைகளில் மாணவர்களை உருவாக்கி உயர்கல்வி வாய்ப்புக்களை எமது மண்ணிலே மாணவர்களுக்கு வழங்கி வந்துகொண்டு இருக்கிறமை பெருமைக்குரிய அம்சமாகும்.

அந்த வகையில் கற்கை நெறிகளை முழுமையாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளினை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதில்
1. சட்டமாணி கற்கைநெறி
2. வணிக மற்றும் முகாமைத்துவ கற்கைநெறி
3. தகவல் தொடர்பாடல் மற்றும் கணனி கற்கைநெறி.
4. ஆங்கில மொழியில் கற்கைநெறி.
5. தொழில்வாண்மையான திறன் கற்கை நெறிகள்
என மாணவர்களுக்கான ஆற்றல்கள் திறமைகளுக்கு ஊக்கமளித்து அவர்களின் சாதனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.