;
Athirady Tamil News

திருப்பதியில் இன்று 20 நிமிடத்தில் விற்று தீர்ந்த ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள்…!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 1 லட்சத்து 44 ஆயிரம் டிக்கெட்டுகளும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 2 லட்சம் டிக்கெட்டுகளும், 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 1.08 லட்சம் டிக்கெட்டுகள் என மொத்தம் 4.52 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்ட 20 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட தேவஸ்தான இணையதளம் சரி வர வேலை செய்யாததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

நாளை காலை 9 மணிக்கு 1 நாளைக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வீதம் ஒரு லட்சத்து 55 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இதேபோல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக பக்தர்களுக்கு டிசம்பர் 31-ந்தேதி வழங்கப்படுகிறது.

இதற்காக பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசன் விசுவாசம் மற்றும் வழிப்பறி ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 34,035 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,891 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.