;
Athirady Tamil News

2022-ம் ஆண்டை விழிப்புணர்வான உலகம் உருவாக்க அர்ப்பணிப்போம் – சத்குரு..!!

0

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ஆதியோகி முன்பு நடந்த சிறப்பு சத்சங்கத்தில் பேசியதாவது:

மனிதர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது தான் உலகில் நாம் தற்போது செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை. அதன் மூலம் மட்டுமே விழிப்புணர்வான உலகை உருவாக்க முடியும். நாம் உலகில் விழிப்புணர்வு அலையை உருவாக்கிவிட்டால், பூமியை பாதுகாப்பது என்பது இயற்கையான எதிர்வினையாக நிகழ்ந்துவிடும். உலகை தற்போது இருப்பதை விட சிறப்பானதாக ஆக்க நாம் உறுதி ஏற்போம்.

காலம் என்பது எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காது. அது ஓடிக் கொண்டே இருக்கும். காலத்துடன் சேர்ந்து வாழ்க்கையும் ஓடிக் கொண்டே இருக்கும். ஆகவே, அதன் மதிப்பை உணர்ந்து ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக மாற்ற முயற்சி எடுங்கள். ஒவ்வொரு தினத்தையும் புத்தாண்டின் முதல் தினமாக நீங்கள் பார்க்க வேண்டும்.

364 நாட்களை விழிப்புணர்வு இன்றி ஏனோ தானோ என்று கழித்துவிட்டு ஒரே ஒரு நாள் தீர்மானம் எடுத்து கொண்டாடுவதால் எந்த பயனும் விளையாது. வெறும் தீர்மானங்களை எடுப்பதை விட தினமும் நீங்கள் ஒரு உயிராக என்ன செய்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். எல்லா கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடும் வகையில் சுதந்திரமான வாழ்வை நோக்கி நகர்கிறீர்கள் அல்லது மேலும் மேலும் அதிகப்படியான கட்டுப்பாடுகளுக்குள் சிக்கி போகிறீர்களா என்பதை கவனியுங்கள். அதற்கேற்ப உங்கள் செயலை விழிப்புணர்வாக செய்ய பழகுங்கள்.

இவ்வாறு சத்குரு பேசினார்.

‘கான்சியஸ் பிளானட்’ என்னும் உலகளவிலான இயக்கத்திற்காக சத்குரு, 2022-ம் ஆண்டை அர்ப்பணித்துள்ளார். இவ்வியக்கம் மண் வள பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக வலுவான கொள்கைகளை மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துகாட்ட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.