;
Athirady Tamil News

100 கோடி டொலர் கடன் தருகிறது இந்தியா!!

0

டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும்பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இந்திய அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, அண்மையில் சீனாவிடமிருந்து 150 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதாகவும், கடனாக ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் கட்டாரிடமிருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களைப் பெறப்பட உள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.