;
Athirady Tamil News

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 1,525 ஆக அதிகரிப்பு…!!

0

இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1,431 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,525 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 23 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமைக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 460 பேரும், டெல்லியில் 351 பேரும், குஜராத் 136, கேரளாவில் 109 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 67 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. தமிழகத்தில் 117 பேர் ஒமைக்ரான் பாதிப்புடன் உள்ளனர்.

கர்நாடகா 64 பேரும், அரியானாவில் 63 பேரும், ஆந்திராவில் 16 பேரும் ஒமைக்ரான் தாக்குதலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒமைக்ரானை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பாதித்த 1,525 பேரில் 560 பேர் குணமடைந்து விட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் சீரான உடல்நலத்துடன் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.