;
Athirady Tamil News

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைவிட அவரது மகன் ஐந்து மடங்கு பணக்காரர்…!!!

0

பீகாரில் பா.ஜனதாவுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளவர்கள் ஒவ்வொரு காலண்டர் வருடத்தின் இறுதி நாட்களான 31-ந்தேதி சொத்து மதிப்புகளை வெளியிட வேண்டும் என நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2021 வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31-ந்தேதி சொத்து மதிப்புகளை முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர்கள் உள்ளிட்ட மந்திரிகள் தங்களது சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இதில் நிதிஷ் குமாரை விட அவரது மகன் ஐந்து மடங்கு பணக்காரர் எனத் தெரிய வந்துள்ளது.

நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள தகவலில், அவரிடம் ரொக்கமாக 29,385 ரூபாய் இருப்பதாகவும், வங்கியில் 42,763 ரூபாய் டெபாசிஸ்ட் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் தனது மகன் நிஷாந்திடம் கையிருப்பு 16,549 ரூபாயும், வங்கியில் நிரந்த வைப்பு தொகை அல்லது டெபாசிஸ்ட் என 1.28 கோடி ரூபாய் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நிதிஷ் குமார் தனக்கு 16.51 கோடி ரூபாய் அளவில் அசையும் சொத்துக்களும், 58.85 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளையில் தனது மகனுக்கு 1.63 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 1.98 கோடி ரூபாய் அளவில் அசையா சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள துவார்காவில் தனக்கு ஒரு வீடு இருப்பதாகவும், தன்னுடைய மகனுக்கு விவசாய நிலம், வசிக்கும் வீடுகள் நலந்தா மற்றும் கன்கார்பாக் மாவட்டங்களில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனதுமகனுக்கு 1.45 லட்சம் மதிப்பில் தனது மகன் 13 மாடுகள் மற்றும் கன்றுகுட்டிக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.