;
Athirady Tamil News

முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்திய பிட்காய்ன்…!!!

0

கிரிப்டோகரன்சியில் முதன்மையாக திகழ்வது பிட்காய்ன். கண்ணிற்கு புலப்படாத மெய்நிகர் கரன்சிதான் இனிமேல் உலகை ஆட்டிப்படைக்க போகிறது. ஒவ்வொரு அரசும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது என்ற செய்தியும் வெளியானது. இதற்கிடையே கிரிப்டோகரன்சியில் மோசடியும் நடைபெற்று ஏராளமானோர் பணத்தை இழக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

இருந்தாலும், கடந்த நவம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு பிட்காய்ன் மதிப்பு 69 ஆயிரம் அமெரிக்க டாலராக இருந்தது.

அதன்பின் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கிரிப்டோகரன்சி மோசடியை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர முடிவு எடுத்தது. இதனால் கிரிப்டோகரன்சியின் மதிப்புகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.

இந்த நிலையில் இன்று நியூயார்க் பங்குச்சந்தையில் இன்று 6 சதவீதம் குறைந்து பிட்காய்ன் மதிப்பு 39,774 டாலராக உள்ளது. இது கடந்த நவம்பர் மாதத்தில் இருந்த மதிப்பை விட 40 சதவீதம் குறைவாகும். 2022-ம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது என மூத்த நிதிச்சந்தை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு உலகளவில் பொருளாதார மந்தநிலை உருவானபோது, பிட்காய்ன் தனிப்பட்ட அல்லது ஒரு குழு நபர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு அதன் மதிப்பு 500 சதவீதமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2022-ம் ஆண்டுக்குள் பிட்காய்ன் மதிப்பு 20 ஆயிரம் டாலராக சரிவடைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.