;
Athirady Tamil News

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை!!

0

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .

கிளிநொசி விநாயகபுரம் கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மற்றும் உயர்தர கல்விக்கு தகுதியுடைய மாணவர்களையும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவி மற்றும் 40 வருடங்களாக குறித்த கிராமத்தில் பல சமூக சேவைகளை ஆற்றிவந்த மதியவர் சுந்தர்ரஜ் ஆகியோரை கௌரவிக்கும் முகமாக இன்று (17) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

இவர்களை இன்றைய நிகழ்வில் கௌரவிப்பது என்பதற்கு பின்னால் பலரது உழைப்பு உள்ளது அவர்களுடைய கல்வி க்கும் பலரது உழைப்பு வழிகோலியது. அதே போன்று 40 வருடங்களுக்கு மேல் வளர்த்த முதியவரையும் நன்றியுனர்வோடு கௌரவப் படுத்தியுள்ளனர்.

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் கொண்டு செல்லும் உதரணமாக ஒரு புட்டினை செய்யும் தொழிலாளி ஒவ்வொரு புட்டுக்கும் சாவிகளை செய்கின்றான். ஆனால் ஒரு சாவியை கொண்டு மற்றைய பூட்டை திறக்க முடியாது ஒரு சாதாரண தொழிலாளியாக இதனை செய்ய முடியுமென்றால் இறைவனால் ஏன் செய்யமுடியாது.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவில் இந்த மண்ணிலேயே பிரசவ்க்கப்பட்டவர்கள் விடுதலை உணர்வுடன் வாழ்பவர்கள் வரலாறுகள் வித்தியாசமானது. பல கனவுகளோடு வாழ்ந்தவர்கள் இன்றும் ஆத்மாக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கனவுகள் என்றோ ஒருநாள் நனவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.