;
Athirady Tamil News

‘மூட்டு வலிக்கு முடக்கறுத்தான்’!! (மருத்துவம்)

0

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக் கொட்டன் போன்ற பெயர்களும் வழக்கத்தில் உண்டு. முடக்கறுத்தான் இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. முடக்கறுத்தான் இலைகளைப் பசுமையாக சேகரித்துக் கொண்டு இரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கை கால் குடைச்சல், மூட்டு வலி தீரும்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி, காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

கீல் வாதம், வீக்கம் தீர தேவையான அளவு முடக்கறுத்தான் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர குணமாகும். மலச்சிக்கல் தீர, குடல் வாயு போன்றவற்றை கலைய செய்யும்.

வாயுவை போக்கவும், முடக்கு வாதத்தை நீக்குவதற்கு அருமருந்தாக முடக்கறுத்தான் பயன்படுகிறது. குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக பற்று போட பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்கும்.

முடக்கறுத்தான் ரசம் செய்ய:

ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும். இவற்றை 1 டம்ளர் அளவு குடித்து வர வேண்டும்.

முடக்கறுத்தான் தோசை:

தோசை செய்ய தேவையான அளவு அரிசியுடன் 1 கைப்பிடி அளவு முடக்கறுத்தான் இலைகளைச் சேர்த்து நன்கு அரைத்து உடனடியாக (புளிக்காமல்) தோசையாக செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலி தீரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.