;
Athirady Tamil News

பள்ளிகளை திறக்க நடைமுறைகளை வகுக்கிறது மத்திய அரசு…!!

0

நாடு கொரோனா தொற்றின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தபோது, கடந்த டிசம்பர் 2-ந்தேதி ஒமைக்ரான் தொற்று இங்கே நுழைந்தது.

அந்த தொற்று அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் நாடு முழுவதும் பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றபோதும், இதில் கிராமப்புற, கடைக்கோடி பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் பலன் பெற முடியவில்லை.

இப்போது கொரோனா 3-வது அலை உச்சத்தை நோக்கிக்கொண்டிருக்கிற இந்த சூழலில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை, பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தொற்று நோயியல் நிபுணர் சந்திரகாந்த் லஹரியா, கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் யாமினி அய்யர் தலைமையிலான பெற்றோர்கள் குழு டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோசிடியாவை சந்தித்து 1,600-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுவை அளித்தது.இதுபோன்ற கோரிக்கைகள் வேறு சில மாநிலங்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் பெற்றோர்களில் ஒரு பிரிவினர், ஆன்லைன் வகுப்புகள் தொடரவேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதுபற்றி மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கையில், ‘‘பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரி வருவதால், கொரோனா கால அனைத்து வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறப்பதற்கான ஒரே மாதிரியான மாதிரியை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது’’ என கூறியது.

டெல்லியில் பள்ளிகள் திறப்பு பற்றி அடுத்த வாரம் முடிவு எடுக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.