;
Athirady Tamil News

நல்லெண்ணெயின் நற்குணங்கள்!! (மருத்துவம்)

0

எள்ளிலிருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே, எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கல்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர் 25 மி.லீ எண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடம் அப்படியே வாய்க்குள்ளேயே வைத்திருந்து பின்னர், பற்களுக்கிடையே நன்றாக படும்படி கொப்பளிக்க நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும். அப்போது அதை வெளியே கொப்பளித்து விடவேண்டும். இப்படி செய்வதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு போன்றவை நீங்கிவிடும். உள் உறுப்புகள் பலம் அடைவதுடன், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் வலி, ஈறு வீக்கம், தலை வலி என்பனவும் சரி செய்யப்படும்.

நல்லெண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகளை வரவிடாதும் தடுக்கின்றன. உடலில் வலி இடத்தில் நல்லெண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி நீங்கும்.

சிலருக்கு அதிக உஷ்ணத்தால் அடி வயிறு வலி, சிறுநீர் பிரிவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் அடி வயிற்றுப்பகுதியில் எண்ணெயை தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.