;
Athirady Tamil News

நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து போராட்டம்!! (படங்கள், வீடியோ)

0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக கூடிய காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், உறவுகளை திருப்பித்தா, நடமாடும் செயலமர்வில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை கையில் எடுக்காதே போன்ற பல கோஷங்களை எழுப்பினார்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் நிகழ்வு மண்டபத்திற்குள் செல்ல முற்படுகையில் பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன் அங்கு குழப்பமான நிலை ஏற்பட்டது.

இதன்போது குறித்த இடத்திற்கு வவருகைதந்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா போராட்டத்தில் ஈடுபட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

காணாமலாக்கப்பட்டோரின் விபரங்களை தன்னிடம் தருமாறு ஆளுநர் கூறிய போது அதற்கு மறுப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் பல முறை நாங்கள் விபரங்களைக் கொடுத்துள்ளோம்.இதுவரை எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தனர்.

இதனை அடுத்து ஆளுநர் அங்கிருந்து விலகிச் சென்றார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் அங்கு கூடியிருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”


யாழில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை ஆரம்பம்!! (வீடியோ, படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.