;
Athirady Tamil News

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!! (படங்கள்)

0

இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் திறப்பு வைக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இன்று (28.02) இந்நிகழ்வு இடம்பெற்றது.

முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களினால் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தை

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினரொருவரால் மாணவர் ஒருவருக்கு வழங்குவதற்காக துவிச்சக்கரவண்டியொன்று மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.