;
Athirady Tamil News

உக்ரைன் போருக்கு ரஷிய செஸ்வீரர் எதிர்ப்பு- அமெரிக்கா தலையிட அழைப்பு…!!

0

ரஷியாவை சேர்ந்தவர், முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ். இவர் உக்ரைன் போரில் அமெரிக்காவும், நேட்டோவும் செயல்பட அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

* உக்ரைன் போரில் அமெரிக்காவும் நேட்டோவும் ஒன்றும் செய்யாது என்று கேள்விப்படுகிறோம். புதினுக்கு இதுஒன்றன்பின் ஒன்றாக பச்சை விளக்கு ஆக அமைகிறது. சிரியாவும், பெலாரசும் உக்ரைனில் உள்ள உக்ரைனியர்களை அழிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

* புதினின் போர்க்குற்றங்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க நேட்டோ கடமைப்பட்டிருக்கவில்லை என்று சொல்வதை நிறுத்துங்கள். கடமை தார்மீகமானது.

* புதின் ஒவ்வொரு முறையும் தீவிரம் அடைவார். இது அவருடைய உத்தி. நீங்கள் தலையிட்டு, உக்ரைனைக் காப்பாற்றினால் அவர் தீவிரம் அடைவார். நீங்கள் செய்யாவிட்டாலும் தீவிரம் அடைவார். எனவே நீங்கள் செய்யும் தீங்கு, அவரது திறனைக் குறைக்க வேண்டும்.

* ரஷிய அதிபர் புதினின் அடுத்த நகர்வு குறித்து யோசிப்பதில் யாரும் தங்களை மட்டுப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.