;
Athirady Tamil News

பீர்க்கங்காய் !! (மருத்துவம்)

0

Dr. நி.தர்ஷனோதயன்

MD(S)(Reading)

Botanical name – Luffa acutangula

Family – Cucurbitaceous

ஒரு குவளைப் பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சீகி சேர்த்து நன்றாகக் கலக்கி காலை மாலை என இரண்டு ​வேளையும் உணவுக்கு முன் பருகி வந்தாள் மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.

பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் உடனடியாக ​இரத்தக் கசிவைப் போக்கிக் காயத்தை ஆறச் செய்யும் பணியைச் செய்கின்றது.

பீர்க்கங்காய் ஒன்றை துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர்விட்டு அடுப்பேற்றி நன்றாக கொதிக்க வைத்து அதனோடு சுவைக்காகப் போதிய உப்பிட்டு அன்றாடம் காலை, மாலை என இருவேளை பருகினால் வயிற்றினுள் பல்கிப் பெருகித் துன்பம் தருகின்ற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.

பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அரை டம்ளர் சாறுடன் போதிய சீனி சேர்த்து தினம் இருவேளை அருந்திவருவதால் ஆஸ்த்துமா ​ஏற்படாது.

பீர்க்கங்காயின் இலைகளை நன்றாக அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து இரண்டையும் சேர்த்துக் கலந்து தொழுநோய் எனப்படும் தோல் நோயின் மேலே பூசி வருவதால் தொழுநோய் புண்கள் விரைவில் ஆறும்.

பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில்வைத்து நன்றாக உலர்த்தி பின் இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வருவதால் இளநரை என்பது தடைச் செய்யப்படுவதோடு தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.

பீர்க்கங்காய் கொடியின் வேர் பகுதியை சேகரித்து நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை சிறிதளவு எடுத்து உண்டுவர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும். பீர்க்கங்காய் கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர்விட்டு கழுவி அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வருவதால் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

பீர்க்கங்காய் கொடியின் இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நாட்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற் பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறிவிடும்.

பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து உடன் சீனியோ, தேனோ சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் அருந்தி வந்தாள் பித்த மேலீட்டால் வந்த காய்ச்சல் தணிந்து போகும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கம் கரைந்து போகும்.

பீர்க்கங்காய்ச் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வருவதால் அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்னும் சத்தும் கிடைக்கப் பெற்று கண்பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும்.

பீர்க்கங்காயில் உள்ள இரத்த சுத்திகரிப்பு செய்யக்கூடிய வேதிப் பொருளானது முகத்தில் ஏற்படக்கூடிய முகப்பருக்களை விரைவில் குணமாக்க ஏதுவாகின்றது.

உடலின் மேலுள்ள துர்நாற்றத்தையும் போக்க வல்ல மருத்துவ குணத்தைப் பீர்க்கங்காயின் நார்பெற்றிருக்கிறது. பீர்க்கங்காயை அன்றாடமோ அல்லது அடிக்கடியோ மற்ற காய்கறிகளோடு சமைத்து உணவக உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லதாக விளங்குகின்றது.

பீர்க்கங்காயில் புதைந்து இருக்கும் அதிக அளவிலான பீட்டா கெரோட்டின் என்னும் வேதிப்பொருள் கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது. பீர்க்கங்காயின் புதிய சாற்றை ஓரிரு சொட்டுக்கள் கண்களில் விடுவதால் கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் மண் கொட்டியது போன்ற உறுத்தல் ஆகியவை குணமாகும்.

பீர்க்கங்காய் பார்ப்பதறகு கரடு முரடான தோற்றத்தைப் பெற்றிருந்தாலும் மானுடர்க்கு உதவும் பல்வேறு மகத்தான மருத்துவ குணங்களைப் பெற்று கண்கள், ஈரல், தோல், சிறுநீரகம், இரையறை ஆகிய உறுப்புக்கள் ஆரோக்கியமாகவும், சீராகவும் இயங்க உதவுகிறது என்பதை அனைவரும் மனதில் இருத்திப் பயன்பெறுவோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.