;
Athirady Tamil News

விபுலானந்த கிரிக்கெட் லீக்கின் இறுதிப்போட்டி நாளை!! (படங்கள்)

0

2022 ம் ஆண்டிற்கான விபுலானந்த கிரிக்கெட் லீக்கின் இறுதிப்போட்டி நாளை (20) கரணவாய் தெற்கு விபுலாந்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

1 வது பருவகால போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இத் தொடருக்கான இறுதிப்போட்டி VCL குழுமத்தின் தலைவர் சுகந்தன் தலைமையில் நாளை (20) மதியம் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டி கரணவாய் பிரதேசத்தில் உள்ள கழகங்களை மையமாக கொண்டு ஏல அடிப்படையில் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு 8 அணிகளுக்கிடையில் போட்டிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இறுதிப்போட்டியை நேரலையாக https://www.facebook.com/vipulananthaofficial/ எனும் முகநூல் ஊடாக கண்டு களிக்க முடியும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.