;
Athirady Tamil News

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன…!!

0

04.30: நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்ய ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆனால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதை ஏற்கவில்லை.

03.00: ஜி-7 மாநாட்டிற்கு பிறகு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜி-7 கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவின் மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக அறிவித்தனர்.

நேட்டோ மாநாட்டிற்கு பிறகு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீதான போரில் ரஷியா ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.

01.30: ரஷியாவின் படையெடுப்பு காரணமாக 3.5 மில்லியன் அகதிகள் வெளியேறுவதால், உக்ரைனில் இருந்து வரும் ஒரு லட்சம் அகதிகளை அமெரிக்கா வரவேற்கும் என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.

00.10: ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகள் வாக்களித்தன.

தீர்மானத்துக்கு எதிராக ரஷியா, பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய 5 நாடுகள் வாக்களித்தன. சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் இந்த வரைவு தீர்மானத்தில் இல்லை என்பதால் இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.