;
Athirady Tamil News

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா போர்: கீவ் நகரை சுற்றி வளைத்து தாக்கும் ரஷிய படைகள்…!!!

0

12.10: உக்ரைனின் தெற்கு மற்றும் டான்பாஸ் பிராந்தியங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், தேசத்துரோகம் செய்த 2 மூத்த அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர் என தெரிவித்தார்.

08.45: உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ரஷியாவுடன் இணைந்து செயல்படுத்தி வரும் ஷக்லினில் இயற்கை எரிவாயு எடுக்கும் ஷக்லின்-2 திட்டத்தை ஜப்பான் கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.

ஆனால், ரஷியாவுடன் இணைந்து மேற்கொண்டு வரும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடப்போவதில்லை என்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பாராளுமன்றத்தில் உறுதியாக தெரிவித்தார்.

06.50: செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு ரஷிய படைகள் வெளியேறி உள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

06.40: உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து ராணுவ நடவடிக்கையை திரும்ப பெறுவதாக புதின் தெரிவித்துள்ளதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பைடன்-புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

04.00: உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி ரஷிய படைகள் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த வாரம் உக்ரைன் தலைநகர் அருகே தனது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக மாஸ்கோ உறுதியளித்த போதிலும், அந்நாட்டு படைகளின் தாக்குதல் தொடர்வதாகவும் பிரிட்டன் உளவுத்துறை அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

02.20: புதின் தனது ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்ற அமெரிக்காவின் கருத்தை ரஷியா நிராகரித்துள்ளது. அதிபர் புதின் மாளிகையில் என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையான தகவல்கள் பென்டகனிடம் இல்லை என ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

31.3.2022

22.30: அகழிகள் தோண்டியபோது கதிர்வீச்சு வெளிப்பட்டதையடுத்து ரஷிய படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேறத் தொடங்கியதாக உக்ரைனின் அரசு மின் நிறுவனம் கூறி உள்ளது.

21.00: ரஷியாவிலிருந்து எரிசக்தி இறக்குமதியில் இந்தியாவுக்கு அமெரிக்கா எந்த ஒரு சிவப்பு கோடும் போடாது. ஆனால், கொள்முதல் செய்வதில் வேகமான நடவடிக்கையை விரும்பவில்லை என டெல்லி வந்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தெரிவித்தார்.

16.04: டொனஸ்க் பிராந்தியத்தில் ரஷியா இரவு முழுவதும் ஒயிட் பாஸ்பரஸ் வெடிபொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக டொனஸ்க் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.

16.04: செர்னிவ், கீவ் அருகே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக இங்கிலாந்து புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.