;
Athirady Tamil News

இடைக்கால அரசு : 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பிரதிநிதிகள் நியமனம்!!

0

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோர் பிரதிநிதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் சுயேச்சை எம்பிக்கள் ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும், அதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“எமது பாராளுமன்றக் குழுவில் உள்ள இந்த ஐந்து உறுப்பினர்களும் இந்தப் பணியில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம். ஜனாதிபதியும் இணக்கப்பாட்டுக்கு வந்தால், புதிதாக அமைக்கப்படும் அரசாங்கம் தேசிய ஒருமித்த அரசாங்கம் என பெயரிடப்பட வாய்ப்புள்ளது” என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.