;
Athirady Tamil News

75வது சுதந்திர தினம் – இஸ்ரேல் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

0

இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அரசு மற்றும் அனைத்து இந்தியர்கள் சார்பாக நமது இஸ்ரேலிய நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு நமது தூதரக உறவுகளின் 30-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். இந்த அத்தியாயம் புதியதாக இருந்தாலும் இரு நாட்டு உறவுகளின் வரலாறு மிகவும் பழமையானது. வரும் ஆண்டுகளில் நமது உறவை மேலும் ஆழப்படுத்துவோம் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.