அரசாங்கத்தை சஜித்திடம் கொடுக்கிறார் கோட்டா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, திங்கட்கிழமை (09) பதவி விலகவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்க அழைப்பார் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியமைக்க எதிர்க்கட்சி தயாராக இல்லை என்றால், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு சர்வ கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு, மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து … Continue reading அரசாங்கத்தை சஜித்திடம் கொடுக்கிறார் கோட்டா?