;
Athirady Tamil News

’அடுத்தவாரம் பேக்கரி, ஹோட்டல்கள் முடங்கும்’ !!

0

கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் அனைத்து பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்கள் சகல உற்பத்திகளையும் நிறுத்தும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பேக்கரி உற்பத்திகளுக்கான அனைத்து மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் உற்பத்தியை முற்றாக நிறுத்தியுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

4000 ரூபாய்க்கு குறைவாக இருந்த மா மூடை 12,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் 37.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 20,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் கோதுமை மாவுக்கான தேவையில் 30 சதவீதத்தை வழங்கும் நிறுவனம் ஒரு கிலோ கிராம் மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்துள்ளது என்றும் பல நிறுவனங்களுக்கு மாவின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்றார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாயால் அதிகரித்துள்ளதாக நாட்டிலுள்ள பிரதான மா விநியோகஸ்தர்கள், அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.