;
Athirady Tamil News

யாழில் வீசிய பலத்த காற்றினால் 10 பேர் பாதிப்பு!!

0

யாழில் நேற்று புதன்கிழமை வீசிய காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.

யாழில் வீசிய கடும் காற்றினால் கோப்பாய், நல்லூர், காரைநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோப்பாய் ஜே 286 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நல்லூர் ஜே 97 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், காரைநகர் ஜே 41 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.