உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டருக்கு தலா ரூ.200 மானியம்..!!

உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், சிமெண்ட் விலையை குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும் என்றும் சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்றும் சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.