பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பொதுமக்களின் சுமையை குறைக்கும்- பிரதமர் மோடி கருத்து..!!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி முறையே லிட்டருக்கு ரூ.8 மற்றும் ரூ. 6 -குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5-ம், டீசல் ரூ. 7-குறையும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எப்போதும் மக்கள் நலனே முதலில் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு எப்போதும் மக்கள்தான் முதன்மை, இன்றைய முடிவுகள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு தொடர்பான முடிவுகள் பல்வேறு துறைகளில் சாதகமாக அமையும்.
நமது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் அவர்களின் சுமையை குறைத்து வாழ்க்கையை எளிதாக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.