;
Athirady Tamil News

கலாமன்றம் பிரீமியர் லீக் – கிண்ணத்தை சுவீகரித்தது சூரியா சூப்பர் கிங்ஸ்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் , திருநெல்வேலி கலாமன்றம் விளையாட்டுக்கழகமும் , “BBK பார்ட்னர்ஷிப்” வீரர்களும் பங்குபற்றிய கலாமன்றம் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி நேற்றைய ஞாயிற்றுக்கிழமை மாலை முத்துத்தம்பி மகா வித்தியால மைதானத்தில் நடைபெற்றது.

இறுதி போட்டியில் சூரியா சூப்பர் கிங்ஸ் அணியும் , பவர் கிட்டர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய பவர்கிட்டர்ஸ் அணியினர் 10 பந்து பரிமாற்றங்களில் 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டன. 58 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சூரிய சூப்பர் கிங்ஸ் அணியினர் 6 இலக்குகளை இழந்து , 4 இலக்குகளால் வெற்றியீட்டினார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.