;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் திடீரென குறைப்பு !!

0

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சராசரி தினசரி பெட்ரோல் தேவை 5,000 மெட்ரிக் தொன்னாக இருந்தது. எனினும் கடந்த சில தினங்களாக நாளாந்த பெற்றோலின் தேவை சுமார் 8,000 மெற்றிக் தொன்னாக காணப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிலர் தேவையில்லாமல், அளவுக்கு அதிகமாக பெட்றோல் சேகரிப்பதே இதற்குக் காரணம்.

இதற்கமைய, நாளாந்தம் 4,000 மெற்றிக் டொன் பெற்றோலை விநியோகிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெற்றோலுக்காக வரிசையில் காத்திருந்த குழுவினர் தமது வாகனங்களுக்கு பெற்றோலை பெற்றுக்கொண்டு விட்டு, கேன்களிலும் சேமித்து வைத்துவிட்டு, மீண்டும் வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களில் சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருந்த 137 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 118, 119 அல்லது 19 மற்றும் 97 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி மற்றும் பொது போக்குவரத்திற்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுப்பதே இதற்கான காரணம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் காரணமாக மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் வரிசைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.