;
Athirady Tamil News

21ஐ உடனடியாக நிறைவேற்றுங்கள் !

0

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்காகஇ 21ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென சர்வ மதத் தலைவர்கள் கூட்டாக அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

கொழும்பில் நடைபெற்ற மக்கள் பேரவை அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பௌத்தஇ இந்து இ இஸ்லாம் மதத் தலைவர்கள் மேற்கண்டவாறு நேற்று(25) வலியுறுத்தினர்.

நாட்டு மக்கள் முகங்கொடுத்து வரும் துன்பங்களை தாம் நன்கறிந்துள்ளோம். எவ்வாறாயினும் இலங்கையின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையிலான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடக்கூடாதெனவும் பொதுமக்களிடம் சர்வ மதத் தலைவர்கள் இதன்போது வேண்டுகோள் விடுத்தனர்.

நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறை ஒழித்துஇ இரட்டைக் குடியுரிமைக் கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்குள் வருவதைத் தவிர்க்கும் வகையில 21ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இதன்போது உத்தேசிக்கப்பட்டுள்ள 21ஆவது திருத்தச் சட்டத்தில் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் முன்மொழிந்துள்ள யோசனைகள் நிச்சியமாக உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய திருத்தச்சட்டமாக 21ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதிமுறையை இல்லாதொழிப்பதற்கு அனைத்து அரசியற் கட்சிகளும் தேர்தல் காலங்களில்இணங்கியிருந்தனர்.

அனைத்து கட்சிகளின் முழுமையான ஒத்துழைப்புடனேயே 19ஆவது திருத்தச் சட்டம்கொண்டுவரப்பட்டிருந்தது. எனவே இச்சட்டத்தை திருத்தங்களுடன் மீள சமர்ப்பிதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

நாட்டுக்காக நாட்டை நினைத்து இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் சர்வ மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.