;
Athirady Tamil News

“புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம்” நடத்திய உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வு தொடர்பான செய்திகள் & படங்கள்..

0

“புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம்” நடத்திய உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வு தொடர்பான செய்திகள் & படங்கள்..

தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் “Pungudutivu Bharathi Premier league ” உதைபந்தாட்டப் போட்டி-2022.இறுதிப் போட்டி 28.05.2022 ஞாயிறுக்கிழமை அன்று மாலை 03.00 மணியளவில் எமது கழகத் தலைவர் திரு.குமாரன் கவிதரன் தலைமையில் எங்களுடைய கழக மைதானத்தில் போட்டிகள் இனிதே ஆரம்பமானது.

சிவன், பாண்டவர், அழகு நிலா மற்றும் இளவரசி அணியினர் பங்குபற்றிய தொடரிலே இறுதிப் போட்டிக்கு அழகு நிலா மற்றும் இளவரசி அணியினர் மோதிய போட்டியில் அழகு நிலா அணியினர் 1:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகினர்.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக சீனு அவர்களும் தொடரின் நாயகனாக துசன் அவர்களும் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக ஆதித்தியன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர் அவர்களுக்கு 5000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் சிறந்த நன்னடத்தை அணி மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கேடயம் வழங்கி வைக்கப்பட்டது. இரண்டாவதாக வந்த அணிக்கு 25000 பணப்பரிசும் வெற்றிக்கேடயமும் சம்பியனாக தெரிவான அழகு நிலா அணியினருக்கு 50000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.இ.இலங்கோவன் (செயலாளர்,உள்ளூராட்சி அமைச்சு,வடமாகாணம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.க.சிவகரன் (பிரதேச செயலாளர் , வேலணை) அவர்களும் மற்றும் திரு.வின்சன் அவரது துணைவியார் திருமதி.நோனா வின்சன் (kandula foundation) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (சமாதான நீதவான்),திரு வ.அபிராஜ், திரு.மு.நியாந், திரு.ச.சத்தியமூர்த்தி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் & படங்கள்.. .”புங்குடுதீவு பாரதி விளையாட்டுக் கழகம்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.