;
Athirady Tamil News

மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு..!!

0

சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் 739 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் மருந்து கடைகளின் எண்ணிக்கை 8735 ஆக உள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த மாதத்தில் மக்கள் மருந்தகங்களில் அதிகபட்சமாக ரூ. 100 கோடிக்கு மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் குடிமக்களுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பணம் மிச்சமாகியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பிரிவு உறுதி பூண்டுள்ளது.

மக்கள் மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகளை வழங்குவதற்காக 406 மாவட்டங்களில் உள்ள 3579 வட்டாரங்களுக்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறிய நகரங்கள் மற்றும் வட்டாரங்களின் தலைமையகங்களில் வசிப்பவர்கள் மக்கள் மருந்தகங்களை திறக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.