;
Athirady Tamil News

தமிழக அரசின் 22,550 நிவாரணப் பொதிகள் வவுனியாவை வந்தடைந்தது!! (படங்கள்)

0

பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்பட்ட 22,550 அரிசி பொதிகளும் 750 பால்மா பொதிகளும் இன்று (02.06) காலை வவுனியாவை வந்தடைந்தது.

விசேட புகையிரதம் மூலம் வவுனியாவை வந்தடைந்த நிவாரணப் பொதிகளை வவுனியா புகையிரத நிலைய அத்தியட்சகர் மாவட்ட செயலக அதிகாரிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால் அரிசி , பால்மா உள்ளடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கு 22,550 அரிசி மற்றும் 750 பால்மா பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கான நிவாரணப் பொதிகள் வவுனியாவை வந்தடைந்த நிலையில் அதனை மாவட்ட செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று பிரதேச செயலாளர்களிடம் கையளித்தனர்.

அந்தவகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்கு 12,315 அரிசி, 452 பால்மா பொதிகளும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு 4675 அரிசி மற்றும் 148 பால்மா பொதிகளும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு 3560 அரிசி, 116 பால்மா பொதிகளும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு 2000 அரிசி, 34 பால்மா பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவை கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கபடவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.