;
Athirady Tamil News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடியில் குடியிருப்புகள்- கலெக்டர் அடிக்கல் நாட்டினார்..!!

0

பினாயூர், கட்டியாம்பந்தல் மற்றும் நாஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு பேரிடர் காலங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க ஊராட்சி ஒன்றியம் தோறும் புதிய குடியிருப்புகள் கட்ட தீர்மானிக்கப்பட்டு 443 வீடுகள் கட்டும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த 1-ந் தேதி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையாங்குளம் ஊராட்சியில் சுமார் ரூ.45 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான நிலம் ஒதுக்கப்பட்டு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோட்டநாவல், சடச்சிவாக்கம், ரெட்டமங்கலம், நெல்வேலி, எலப்பாக்கம், நெய்யாடுபாக்கம், மலையாங்குளம், சிறுபினாயூர், தண்டரை, எடையும்புதூர், கிடங்கரை, கிளக்காடி, திருமுக்கூடல், பினாயூர், கட்டியாம்பந்தல் மற்றும் நாஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.