;
Athirady Tamil News

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதியில் 4500 அறைகள் சீரமைப்பு..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் 7,500 அறைகள் கட்டப்பட்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த அறைகள் அனைத்தும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் அறைகளை சீரமைக்காததால் அறைகளின் ஜன்னல்கள், தரைகள் மற்றும் கழிவறைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் மின்விசிறிகள் மின் விளக்குகள் சரிவர இல்லை என்ற புகார் எழுந்தது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தனியார் விடுதிகளை விட தேவஸ்தானம் விடுதிகள் குறைந்த வாடகைக்கு கிடைப்பதால் தேவஸ்தானம் விடுதியிலேயே தங்கியிருந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் சிதிலமடைந்து காணப்படும் 4500 விடுதி அறைகளை 40 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. தற்போது 700 அறைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் மேலும் 2300 அறைகள் சீரமைக்கப்பட உள்ளது. சீரமைக்கப்பட்ட 4500 அறைகள் பக்தர்களுக்கு இன்னும் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருவதால் தேவஸ்தான அறைகள் கிடைக்காததால் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் விடுதிகளில் தங்கி பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தேவஸ்தான அறைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2½ ஆண்டுகளில் ஸ்ரீவாணி டிரஸ்ட் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.