;
Athirady Tamil News

ஆபாச வீடியோக்கள் பார்க்க பயன்படுத்தப்படும் ரெயில் நிலைய இணைய சேவைகள்..!!

0

ரெயில் பயணிகளை டிஜிட்டல் முறையுடன் இணைப்பதற்காக இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டில் மும்பையில் முதன்முதலாக வைஃபை சேவை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு ரெயில் நிலையங்களில் வைஃபை அமைக்கப்பட்டு இதுவரையில் சுமார் 6,100 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வைஃபை சேவை பெரும்பாலும் ஆபாச வீடியோக்களை பார்க்கவும், ஆபாச வீடியோ டவுன்லோடு செய்யவும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தனியார் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வில் செகந்திராபாத் மற்றும் விஜயவாடா ரெயில் நிலையங்களில்தான் அதிகபட்சமாக ஆபாச வீடியோக்கள் டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஐதராபாத் மற்றும் திருப்பதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ரெயில் நிலையங்களுக்கு இணைய சேவை வழங்கும் ரெயில்டெல்லின் தகவலின்படி, செகந்திராபாத் மற்றும் விஜயவாடாவில் உள்ள ரெயில் நிலையங்களில் பயன்படுத்தப்படும் வைஃபையில் 35% ஆபாசப் படங்கள் டவுன்லோடு செய்யவே பயன்பட்டு வருவதாகதெரியவந்துள்ளது. அந்த ரெயில் நிலையங்களில் ரெயில்டெல் வழங்கும் 30 நிமிட இலவச வைஃபையில் 350 எம்.பி.க்கள் ஆபாச படங்கள் டவுன்லோட் செய்யவே பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரெயில் டெல் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கணிசமான எண்ணிக்கையிலான வைஃபை சேவைகள் ஆபாச வீடியோ டவுன் லோடு செய்யவே பயன்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஆபாச இணையதளங்களை அணுக முடியாத நிலையில், விபிஎன் மற்றும் இன்னும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாத சில இணையதளங்கள் மூலம் மக்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.