;
Athirady Tamil News

எரிபொருள், எரிவாயு குறித்து பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு !!

0

ஏற்கனவே அறிவித்ததற்கு அமைய எதிர்வரும் மூன்று வாரங்கள், எரிபொருள் குறித்த கடினமான காலம் என்றும் நாடு முழுவதும் தற்போது காணப்படும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகளில் இது தெளிவாகத் தெரிகிறது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

தற்போது நாட்டை வந்தடைந்துள்ள 3,500 மெற்றிக்தொன் எரிவாயு, வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் மற்றும் தகன சாலைகளுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பின்னர் வரும் கப்பல்கள் மூலம் 4 மாதங்களுக்கான எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள 14 நாட்கள் செல்லும் என்றும் அதற்கிடையில் எரிவாயு தொகையை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தினங்களில் வரவுள்ள 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் கப்பலுடன் மேலும் பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் 2 உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவை மாத இறுதி வரை போதுமானது என்றார்.

தற்போதுள்ள எரிபொருள் 7 நாட்களுக்கு போதுமானது என்றும் மின்சார உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதற்கிடையில் 16ஆம் திகதி 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையும் என்று குறிப்பிட்டார்.

அதன் பின்னர், இந்தியாவுடனான புதிய கடன்வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் 4 மாதங்களுக்கு எரிபொருள் கிடைக்கும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.