;
Athirady Tamil News

எரிபொருள் பிரச்சினையால் பாடசாலை இயங்க முடியாத நிலை!!

0

நாட்டில் நிலவும் மிகவும் மோசமான எரிபொருள் நெருக்கடியினால் பாடசாலைக்கு செல்வதற்கும் தரிசனம் செய்வதற்கும் இயலாத துர்ப்பாக்கிய நிலை தோன்றி வருவதாக கல்வி சமுகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலை தரிசனம் செய்ய முடியாதிருப்பதாக கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் திண்டாடுகின்றார்கள்.

மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்று வருகிறார்கள். பலர் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக துவிச்சக்கரவண்டியை பயன்படுத்துகிறார்கள். இருந்தபோதிலும், தூர பாடசாலைகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் ஒரு சிறிய எரிபொருள் நிலையத்திலேயே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் வழங்கப்படுகிறது. அதற்காக ஐந்து மணி நேரம் ஐந்து கிலோமீட்டர் வரிசையில் நின்று ஆக 500 ரூபாய்க்கு மாத்திரம் பெற்றோல் வழங்கப்படுகிறது.

மேலும், இந்த ஒரு லிட்டர் பெற்றோலில் பாடசாலைக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் பாடசாலைக்கு செல்ல முடியாத பாடசாலையை தரிசனம் செய்ய முடியாத துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டிருப்பதாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் மனக்கவலைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

இதேவேளை சில கல்வி அதிகாரிகள் ஏனையோரை வாரத்தில் 4 தினங்கள் கட்டாயம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று மனிதாபிமானமற்ற முறையில் பணித்து வருவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.